கோவை பேரூர் ஆறுமுக்கவுண்டன்புதூர் அருகில் ரூ.47 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் கோவைபுதூர் இணைப்புச் சாலையில் ஆறுமுககவுண்டன்புதூர் அருகில் ரூ.47இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது கோட்டப் பொறியாளர் சிற்றரசன், உதவி கோட்டாப் பொறியாளர் குமரன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அம்மா அவர்களைப் போலவே, கொங்கு மண்டலத்தின் மீது அதிக அக்கறை கொண்டு, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்பு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை அடுத்தப்படியாக பரப்பளவிலும், மக்கள்தொகைப் பெருக்கத்திலும் மிகப்பெரிய மாவட்டமாக விளங்கி வருகின்றது. பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடிநீர் வசதி, சாலைவசதி, பாதாள சாக்கடைத் திட்டங்கள், மழைநீர் வடிகால்கள், பூங்காக்கள்;, உயர்மட்ட பாலங்கள் என அனைத்து வசதிகளையும் மேம்படுத்திடும் அரசு தான் மக்கள் நலம் பேணும் திறன்வாய்ந்த அரசாக திகழ முடியும். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தினை 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றியுள்ளார்.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியினை தற்பொழுது அடைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனிகவனம் செலுத்தி, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதற்கு அத்திக்கடவு அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டங்களும், நிறைவேற்றப்பட்டுள்ள பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டங்களும், கோயம்புத்தூர் காந்திபுரம் | இரண்டடுக்கு மேம்பாலம், உக்கடம் உயர்மட்டப்பாலம், மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அ க ல ப் ப டு த் தப் பட் டு ள் ள து.
அதுமட்டுமல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம், அவினாசி சாலை உப்பிலிபாளையம் முதல் சித்ரா வரையிலான உயர்மட்ட மேம்பாலம், வெள்ளலூர் பகுதியில் ஒருங்கினைந்த பேருந்து நிறுத்தம், போன்ற பணிகளும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. அதுபோலவே நகர்புறச் சாலைகளுக்கு நிகர கிராமப்புற சாலைகளை மேம்படுத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, பேரூர் கோவைபுதூர் இணைப்புச் சாலையில் ஆறுமுககவுண்டன்புதூர் அருகில் ரூ.47இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 12.90மீ அகலமும், 10.50மீ ஓடுதள அகலமும், 7.60 நீர்வழிப்பாதை அகலமுடைய பாலப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
மேலும், இச்சாலையினை அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தினை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என்று 40 வருட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இப்பகுதிகளிலுள்ள மக்களின் நீண்ட கால இக்கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கும், வாகனஓட்டிகளும், வியாபாரிகளும் பயனடைவார்கள். என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.